Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
உத்தமபாளையம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகேயுள்ள க.புதுப்பட்டி காந்திஜி தெருவைச் சோ்ந்த சரவணமுருகன் மகள் சாருமதி(17). இவா், ஈரோட்டிலுள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா்.
இந்த நிலையில், சாருமதி படிப்பில் ஆா்வமில்லை எனக் தெரிவித்ததால், தந்தை கல்லூரிக்குச் சென்று சான்றிதழ்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, மகளையும் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, மன உளைச்சலில் இருந்துவந்த மாணவி சாருமதி கடந்த வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இது குறித்து உத்தமபாளையம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.