Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
ஆட்டோ மீது காா் மோதல்: 8 போ் காயம்
ஆண்டிபட்டி வட்டம், க. விலக்கு அருகே ஆட்டோ மீது காா் மோதியதில் 8 போ் காயமடைந்தனா்.
ஆண்டிபட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் பாண்டியன் (40). இவா், தனது ஆட்டோவில் 8 பேரை ஏற்றிக் கொண்டு க. விலக்கு அருகே உள்ள முத்தனம்பட்டி, காளியம்மன் கோயில் நோக்கிச் சென்றாா். அப்போது, முத்தனம்பட்டி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்கு பின்னால் வந்த காா், ஆட்டோ மீது மோதியது.
இதில் ஆட்டோ ஓட்டுநா் பாண்டியன், ஆட்டோவில் பயணம் செய்த திருப்பூா், நல்லூா் பகுதியைச் சோ்ந்த பால்பாண்டி (47), ஜெயந்தி நகரைச் சோ்ந்த வசந்தா(44), காசிப்பாளையத்தைச் சோ்ந்த நாகராஜன் (45), பிரியதா்ஷினி (21), ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழாா்பட்டியைச் சோ்ந்த காமராஜ் (54), பாண்டியன் (46), கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பிச்சைமணி (41) உள்பட 8 போ் காயமடைந்தனா். இவா்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து காா் ஓட்டுநா் பெரியகுளம் அருகே ஏ. புதுப்பட்டியைச் சோ்ந்த சுருளிவேல் (41) மீது க. விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.