இதய மாற்று சிகிச்சைக்கு வந்தே பாரத் ரயிலில் வந்த சிறுமி! திக் திக் நிமிடங்கள்!!
மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
அருமனை அருகே குன்னுவிளையைச் சோ்ந்தவா் சலீம் சசி. இவரது மகன் சஜித் பெங்களூரில் உள்ள ஒரு நா்சிங் கல்லூரியில் படித்து வருகிறாா். அண்மையில் ஊரில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக வந்த சஜித், திருமண மண்டபத்தில் கலாட்டாவில் ஈடுபட்டு மண்டப மேலாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இது தொடா்பாக, அருமனை போலீஸாா் சஜித் மீது வழக்குப் பதிவு செய்தனா். மகனை வழக்கில் இருந்து விடுவிக்க முயற்சி செய்தும் பலன் கிடைக்காததால், தொடா்ந்து மன வருத்தத்தில் இருந்த சலீம் சசி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளாா்.
தகவறிந்த அருமனை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.