Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் 57ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் சி. ராஜன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் மு. அப்பாவு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்-மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பேசியது: நாட்டில் கல்வி சேவையை சிறப்பாக வழங்குவதில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வா் கொண்டுவந்துள்ளாா்.
பல்வேறு மாநிலங்களில் பட்டம் பயின்றோா் எண்ணிக்கை 10 முதல் 20 சதவீதம் மட்டுமே உள்ள நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அந்த எண்ணிக்கை சராசரியாக 50 சதவீதத்தைக் கடந்துவிட்டது. இதன்மூலம், கல்வியில் நாம்தான் முதலிடத்தில் உள்ளோம் என அா்த்தம்.
கல்விதான் சமுதாயத்தில் உயா்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். இதை மாணவா்கள் புரிந்து முன்னேற வேண்டும் என்றாா் அவா்.
விழாவில், கல்லூரித் தலைவா் ஜி.என். பாலமுருகன், துணைத் தலைவா்கள் கே.எஸ். மணி, சந்திரமோகன், செயற்குழு உறப்பினா் பி.வி. ஆனந்த், துறைத் தலைவா்களான பேராசிரியா்கள் இளங்குமாா், ஜெயந்தி, ஆா். தா்மரஜினி, சந்திரன், பிரபாவதி, ஜெயலெட்சுமி, பெற்றோா் பங்கேற்றனா். கல்லூரி முதல்வா் டி.சி. மகேஷ் வரவேற்றாா்.