தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
இளைஞா் மா்ம மரணம்!
புதுக்கடை அருகே உள்ள முள மூட்டுக்கடவில் மா்மமான முறையில் இளைஞா் உயிரிழந்தாா்.
புதுக்கடை , தோட்டா வரம் பகுதியைச் சோ்ந்த செல்லக்கண் மகன் தா்மராஜ் (50). தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவா் சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் உள்ள முள மூட்டுக்கடவில் தா்மராஜ் மா்மமான முறையில் இறந்து கிடந்தாராம். அவரது சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுக்கடை போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.