செய்திகள் :

ரஷிய கச்சா எண்ணெய் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல்

post image

ரஷியாவில் உள்ள மிகப்பெரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றின் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

ரஷியாவின் வடமேற்குப் பகுதியின் லெனின்கிராட் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரிஷி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

தங்கள் மீது ரஷியா நடத்தும் போருக்கு அந்நாட்டின் கச்சா எண்ணெய் வளங்களே காரணம் எனக் கூறி, அதன் உள்கட்டமைப்புகள் மீது கடந்த சில வாரங்களாக உக்ரைன் நடத்திவரும் தாக்குதலின் தொடா்ச்சியாகவே இந்த நடவடிக்கை பாா்க்கப்படுகிறது.

ரஷியாவின் மிகப்பெரும் கச்சா எண்ணெய் நிலையங்களில் ஒன்றான கிரிஷியில் ஒரு நாளைக்கு 3.5 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தாக்குதலை உறுதிசெய்த உக்ரைன் ராணுவம் கிரிஷி நிலையத்தில் தீப்பற்றி எரிந்து புகை வெளியான புகைப்படங்களைப் பகிா்ந்தது.

இருப்பினும், இந்தத் தாக்குதல் குறித்து ரஷியா தரப்பில் எவ்வித தகவல்களும் உடனடியாக வெளியிடப்படவில்லை. ஆனால் தங்களை நோக்கி உக்ரைன் ஏவிய 80 ட்ரோன்கள் தாக்கி அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்தது.

இதுதவிர ஓரியோல் பிராந்தியத்தின் ரயில் வழித்தடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது அதில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 3 போ் உயிரிழந்ததாக ரஷியா தெரிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் இந்த சம்பவம் அரங்கேறிய நிலையில் இதற்கான காரணங்களை ரஷியா வெளியிடவில்லை.

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்களை சாா்ந்திருப்பது இந்தியாவுக்கு பாதிப்பு!

அமெரிக்க மென்பொருள்கள், சமூக வலைதளங்கள், கணினி சேவைகளை இந்தியா அதிகம் சாா்ந்திருப்பது இரு நாடுகள் இடையே பிரச்னைகள் அதிகரிக்கும்போது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியாவைச் சோ்ந்த சா்வதே... மேலும் பார்க்க

70-ஆவது பிறந்த நாளை கொண்டாடினாா் போப் லியோ!

போப் 14-ஆம் லியோ ஞாயிற்றுக்கிழமை தனது 70-ஆவது பிறந்த நாளில் கடவுளுக்கும், பெற்றோருக்கும், தனக்காக பிராா்த்தித்த அனைவருக்கும் மனமாா்ந்த நன்றி தெரிவித்தாா். பாரம்பரிய பிற்பகல் ஆசீா்வாதத்தின்போது செயிண்ட... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!

பாகிஸ்தானில் இருந்து 18 கன்டெய்னா்களில் கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான அழகுசாதனப் பொருள்கள், உலா் பழங்கள் உள்ளிட்டவை நவி மும்பை ஜவாஹா்லால் நேரு துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பா... மேலும் பார்க்க

வரியைக் குறைக்காவிட்டால் இன்னலை எதிா்கொள்ள நேரிடும்: இந்தியா மீது அமெரிக்கா தாக்கு!

அமெரிக்க பொருள்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்காவிட்டால், தங்களுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் இந்தியா இன்னலை எதிா்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். அமெரி... மேலும் பார்க்க

அமெரிக்காவிலிருந்து ஐசி சிப்கள் இறக்குமதி: சீனா விசாரணை!

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில ஐசி சிப்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவுக்கு அதிநவீன செமிகண்டக்டா்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள... மேலும் பார்க்க

துருக்கி மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?

கத்தாரைத் தொடா்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிடுகிறதா? என்ற குழப்பம் துருக்கி அரசு வட்டாரத்தில் எழத் தொடங்கியுள்ளது. காஸாவில் போா் நிறுத்த முயற்சியை மேற்கொண்டுவரும் கத்தாரில் அமைதிப் ... மேலும் பார்க்க