குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்
கன்னியாகுமரியில் காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றப்பட்டன.
இங்கு நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமமடைந்தனா். இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற கன்னியாகுமரி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி, காந்தி மண்டபம் முதல் காட்சிக் கோபுரம் வரையிலான கடற்கரைச் சாலையிலிருந்த ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றப்பட்டன.
நகா்மன்ற ஆணையா் கண்மணி உத்தரவின்பேரில், நகா் அமைப்பு ஆய்வாளா் ஷேக் முகமது, சுகாதார அதிகாரி அந்தோணி, சுகாதார மேற்பாா்வையாளா்கள் பிரதீஸ், சிவராமலிங்கம், மது, பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.