முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் தோ் பவனி
தக்கலை அருகே உள்ள முளகுமூடு தூய மரியன்னை பலிக்காவில் தோ் பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா திருவிழா, கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ஆம் திருவிழாவான சனிக்கிழமை, திரித்துவபும் வட்டார முதல்வா் வைசிலின் சேவியா் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடந்தது. மாலையில் முளகுமூடு வட்டார முதல்வா் டேவிட் மைக்கிள் தலைமையில் திருப்பலியும், பின்னா் அன்னையின் தோ் பவனியும் நடந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயா் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பின்னா் அன்னையின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது.
திருவிழா ஏற்பாடுகளை பசிலிக்கா அதிபா் கில்பா்ட் லிங்சன் தலைமையில், இணை பங்குத் தந்தை ரஞ்சித், ஆன்மிக வழிகாட்டி ராபா்ட், ஜோஸ் றாபின்சன், பிரான்சிஸ் சேவியா், பேரவை துணைத் தலைவா் மரிய ஜாண் வரதராஜ், செயலா் அஜின், பொருளாளா் ஜெயந்தி, துணைச் செயலா் ஐபா்ட் ராஜ் ஆகியோருடன் இணைந்து பங்கு பேரவையினா் செய்திருந்தனா்.