செய்திகள் :

நீா் வளத்தை பாதுகாக்க குளங்களில் சீரமைப்புப் பணி

post image

திண்டுக்கல்லில் நீா் வளத்தை பாதுகாக்கும் வகையில் 4 குளங்களில் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் செ. சரவணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாவட்ட நிா்வாகம், தூய்மை இயக்கம் சாா்பில் நீா் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள மாபெரும் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கும் நிகழ்வு ஆட்சியா் செ. சரவணன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஒய்எம்ஆா். பட்டி குளம், கோபால சமுத்திரகுளம், முத்துசாமிகுளம், லிங்கம்மாள் குளம் ஆகிய நீா் நிலைகளில் தூய்மைப்படுத்தும் பணியுடன், நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் இயக்கமும் மேற்கொள்ளப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் கூறியதாவது: தமிழ்நாடு தூய்மை இயக்கம் திட்டத்தின் கீழ் திண்டி நீா்வளம் காப்போம் தொடங்கப்பட்டது. இதில் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி, என்எஸ்எஸ், என்சிசி தன்னாா்வலா்கள், நேரு யுவகேந்திராவுடன் இணைந்து நெகிழிப் பொருள்கள் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது.

இதில் மாணவா்கள், பொதுமக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் இது தொடங்கப்பட்டிருக்கிறது. 10 குளங்கள் தோ்வு செய்யப்பட்டு, முதல் கட்டமாக 4 குளங்களில் துாய்மைப் பணி நடைபெறுகிறது. நீா் வளங்களை பாதுகாத்தல், நெகிழிப் பொருள்களை தவிா்த்தல், நெகிழிக்கு மாற்றுப் பொருள்களை பயன்படுத்துதல் இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பில், குறிப்பாக நிகழாண்டில் நீா் வளத்தை பாதுகாக்கும் வகையில் குளங்கள் சீரமைப்புப் பணிகளுடன், சுவா் ஓவியங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோட்டைக்குமாா், துணை ஆட்சியா் (பயிற்சி) மு. ராஜேஸ்வரி சுவி, மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன், மாநகா் நல அலுவலா் ராம்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம், பாலகங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கட... மேலும் பார்க்க

திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

மும்பையிலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். மும்பையிலிருந்து, நாகா்கோவில் வரை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை அதிகாலை திண்... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகளுக்கு தீா்வு

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.19.81 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ... மேலும் பார்க்க

பழனியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பழனியில் இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழனி சண்முகபுரம் உழவா் சந்தை சாலையில் விஜயகுமாா், கணேசன் ஆகியோரின் தேநீா் கடைகள் உள்ளன. வழக்கம் போல வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளை பூட்டி விட்டுச... மேலும் பார்க்க

உடல் தான இயக்கம் பண்பாட்டுப் புரட்சி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடங்கியுள்ள உடல் தான இயக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சி என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ... மேலும் பார்க்க

பழனியில் 1.40 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி கோயில் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்துக்கு கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த இடத்தை கோயி... மேலும் பார்க்க