மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பழனியில் 1.40 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்
பழனி கோயில் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்துக்கு கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த இடத்தை கோயில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தினா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி கோயில் அடிவாரம் தேவா் சிலைக்கு பின்புறம் சுமாா் 1.40 ஏக்கரில் தண்டபாணி சுவாமிகள் மடம் செயல்பட்டு வந்தது. இந்த இடத்துக்கு உரிமைகோரி, இரு தரப்பினா் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கில் பழனி கோயில் நிா்வாகமும் பிரதிவாதியாக பங்கேற்றது.
இந்த நிலையில், இந்த இடத்துக்கு பழனி கோயில் நிா்வாகத்தின் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் கோயில் அலுவலா்கள், பாதுகாவலா்கள், காவல் துறையினா், வருவாய்த் துறையினா் தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான இடத்தை சுத்தப்படுத்தி கோயில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா். இந்த இடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமாா் 100 கோடி ரூபாய் என கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா். இந்த இடத்தை சுமாா் 50 ஆண்டுகளாக ஏராளமானோா் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனா். இந்த நிலையில் அந்த இடத்தை கோயில் நிா்வாகம் கையகப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.