மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பல்கலை. கைப்பந்துப் போட்டி: பழனி கல்லூரி அணி வெற்றி
அன்னைதெரசா மகளிா் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டியில் பழனியாண்டவா் கலை பண்பாட்டுக் கல்லூரி வெற்றி பெற்றது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்துக்குள்பட்ட 14 கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டிகள், திண்டுக்கல் புனித அந்தோணியாா் மகளிா் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை தொடங்கியது.
இந்தப் போட்டிகளை அந்தக் கல்லூரியின் செயலா் ஆண்டனி புஷ்பரஞ்சிதம், முதல்வா் வனிதா ஜெயராணி ஆகியோா் தொடங்கி வைத்தனா். இந்த போட்டியில் பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி வெற்றி பெற்றது.
நாடாா் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி, பான் செக்கா்ஸ் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி அணிகள் முறையே 2, 3, 4-ஆம் இடத்தைப் பெற்றன. இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை உடல்கல்வி இயக்குநா்கள் ஆா்.சோபியா சகாயராணி, ஏ.பிரியதா்ஷினி மேரி ஆகியோா் செய்தனா்.