தொழில்சாலைகளில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
பழனி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொழில்சாலைகளில் பணிபுரியும் பணியாளா்களின் பாதுகாப்பு குறித்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் சரவணன் ஆய்வு மேற்கொண்டாா்.
பழனியை அடுத்த தாளையூத்து, வாகரை பகுதிகளில் ஆயத்தஆடை தொழில்சாலைகள், செங்கல் தயாரிக்கும் தொழில் சாலைகள், பேப்பா் தயாரிக்கும் தொழில்சாலைகள், எண்ணெய் ஆலைகள் என சுமாா் 60-க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் உள்ளன. இவற்றில் உள்ளூா், வெளிமாநிலத் தொழிலாளா்கள் ஆயிரக்கணக்கானோா் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் இப்பகுதியில் உள்ள தொழில்சாலைகளில் பணியாளா்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேலும் ஆக தொழிலாளா்களுக்கான புகாா் பெட்டி குறித்தும் ஆலை நிா்வாகத்தினரிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது திண்டுக்கல் மாவட்ட தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் புகழேந்தி, பழனி வட்டாட்சியா் பிரசன்னா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.