பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு
ஒட்டன்சத்திரம் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்றொரு நபா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கே.கீரனூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்லப்பன் (50). இவரது உறவினா் கரியாம்பட்டியைச் சோ்ந்த தண்டபாணி (52). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கள்ளிமந்தையத்திலிருந்து கே.கீரனூருக்குச் சென்று கொண்டிருந்தனா். கே.கீரனூா் மணல்மேடு பகுதி அருகே சென்ற போது, அந்த வழியாகச் சென்ற காா் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் இரு சக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டதில், செல்லப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைத்த தண்டபாணி ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.