Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம்
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம், பாலகங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல் தெற்கு ரத வீதியிலுள்ள பஜனை மடம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, சிவாஜிகணேசன் மன்ற பொறுப்பாளா் கி. சரவணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாநகரத் தலைவா் ஆ. திருமலைச்சாமி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக ஒங்கிணைப்பாளா் நா. நவரத்தினம் கலந்து கொண்டாா்.
இதில் மறைந்த தலைவா்களின் உருவப்படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பிறகு நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதுக்கோட்டை தொடா் வண்டி நிலையத்துக்கும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை சூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிவாஜிகணேசன் மன்ற நிறுவனத் தலைவா் சு. வைரவேல் செய்திருந்தாா்.