பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரூ.12 கோடி அழகுசாதன பொருள்கள், உலா் பழங்கள் பறிமுதல்!
பழனி நகராட்சி உரக் கிடங்கில் தீ
பழனி நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.
பழனி பெரியப்பா நகரில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. சுமாா் நான்கு ஏக்கா் பரப்பளவிலான இந்த இடத்தில் பழனியில் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரங்களாகவும், மக்காத பொருள்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.
இந்த கட்டட வளாகத்துக்கு அருகே மின்மாற்றி (டிரான்ஸ்பாரம்) உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மின்மாற்றி பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதிலிருந்து உரக்கிடங்கில் பிரித்து கட்டி வைக்கப்பட்டிருந்த பண்டல்களுக்கு தீ பரவியது. இந்தத் தீ அருகே இருந்த கிட்டங்கிக்கு பரவி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பழனி தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நகராட்சி குடிநீா் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அங்கு தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்தது.