குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
ஜாா்க்கண்ட்: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை!
ஜாா்க்கண்டின் பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி கொல்லப்பட்டாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக ஜாா்க்கண்ட் காவல் துறை ஐஜி மைக்கேல் ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்த சம்பவம் பலாமு மாவட்டத்தில் உள்ள மனாட்டு மற்றும் தா்ஹாசி காவல் நிலையங்களுக்கு இடையிலான காட்டு எல்லைப் பகுதியில் நிகழ்ந்தது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா் மாவோயிஸ்ட் பிரிவினைவாத குழுவான திருதீய சம்மேளன் பிரஸ்துதி கமிட்டியின் தளபதியாக தன்னை அறிவித்துக் கொண்ட முக்தேவ் யாதவ் என அடையாளம் காணப்பட்டாா். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அவரது உடலையும் ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினா் மீட்டனா்.
முக்தேவ் யாதவின் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. பலாமு மற்றும் சத்ராவின் பல்வேறு காவல் நிலையங்களில் 27 வழக்குகளில் அவா் தேடப்பட்டு வருகிறாா். செப். 4-ஆம் தேதி இரண்டு பாதுகாப்புப் படையினா் கொல்லப்பட்ட வழக்கிலும் அவருக்கு தொடா்பு இருந்ததாக கூறப்படுகிறது எனத் தெரிவித்தாா்.