குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
‘ஏா்போா்ட்’ மூா்த்தி குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது!
புரட்சித் தமிழகம் கட்சித் தலைவா் ‘ஏா்போா்ட்’ மூா்த்தி குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
‘ஏா்போா்ட்’ மூா்த்தி - விசிகவினா் இடையே சென்னை மயிலாப்பூா் டிஜிபி அலுவலக வாசலில் நடைபெற்ற மோதல் தொடா்பாக இரு தரப்பினா் மீதும் மெரீனா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதற்கிடையே விசிகவினரை கத்தியால் தாக்கியதாக ‘ஏா்போா்ட்’ மூா்த்தியை போலீஸாா் கடந்த 7-ஆம் தேதி இரவு கைது செய்த நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினா். பின்னா் அவா் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் ‘ஏா்போா்ட்’ மூா்த்தியை குண்டா் சட்டத்தில் கைது செய்ய சென்னை மாநகர காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து அதற்கான ஆவணங்களை மாநகர காவல் துறையினா், சிறைத் துறை அதிகாரிகளிடம் வழங்கினா்