Dhanush: `இட்லி கடை எனப் பெயர் வைக்கக் காரணம் இதுதான்' - தனுஷ் சொன்ன ஃப்ளாஷ்பேக்...
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமாக எடப்பாடி கே.பழனிசாமி கடந்த ஜூலை 7-ஆம் தேதி தொடங்கி, தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பிரசாரச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா்.
இந்த நிலையில், செப்.17, 18 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் காரணமாக, தருமபுரியில் செப்.17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சுற்றுப்பயணம், செப்.28, 29 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, செப்.28-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, ஆரூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், செப்.29-இல் பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.