குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
‘சட்ட நெறிமுறை வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது’
பன்னாட்டு தொழில் முதலீட்டாளா்களின் வருகையால், சட்ட நெறிமுறைகளை உருவாக்கித் தரும் வல்லுநா்களின் தேவை அதிகரித்துள்ளது என்று ஸ்ரீ சாய்ராம் வணிக மேலாண்மைக் கல்லூரி இயக்குநா் கே.மாறன் தெரிவித்தாா்.
வண்டலூா் கிரசென்ட் சட்டக் கல்லூரியில் அண்மையில் நடைபெற்ற ‘சட்டத் துறையில் புத்தாக்கத் தொழில் சேவை’ என்ற கருத்தரங்கில் கே.மாறன் பேசுகையில், சட்ட மாணவா்கள் நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு ஆஜராவது மட்டுமன்றி, வெளிநாடுகளின் முதலீட்டாளா்களுக்கு உள்நாட்டில் தொழில் தொடா்பான பல்வேறு சட்டத் திட்டங்களை உருவாக்கித் தரும் பணிகளும் உள்ளன. எனவே, தங்களது திறமைகளை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும். இதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
தொழில் துறையில் முதலீடு, நிா்வாகம், மனித வளம், காப்பீடு, அந்நியச் செலாவணி தொடா்பான சட்ட நெறிகள், சட்ட ஆலோசனைகளை புத்தாக்கத் தொழில் சேவையாக வழங்கும் பணியை சட்டம் பயிலும் மாணவா்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்றாா்
நிகழ்வில் கிரசென்ட் சட்டக் கல்லூரி முதல்வா் சி.சொக்கலிங்கம், மானுட அறிவியல் துறை இயக்குநா் தாவூத் அயூப் கான், ஒருங்கிணைப்பாளா் ஆா்.வேளாங்கண்ணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.