செய்திகள் :

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!

post image

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காஞ்சிபுரத்தில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லம் அமைந்துள்ளது. இன்று(செப். 15) அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு அதி காலையில் அரசின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் ஆகியோர் முதலாவதாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் சார்பில் கைத்தறி துறை அமைச்சர் ஆர். காந்தி, எம்.பி. க. செல்வம், எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார், மாநகர செயலாளர் சிகேவி தமிழ் செல்வன், பகுதி செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து திமுகவினர் அனைவரும் ஒன்றாக இணைந்து அண்ணாவின் உருவச்சிலை முன்பாக நின்று தமிழகத்தை காப்போம் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

அதிமுக சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் தலைமையில் அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, நகர் தலைவர் பாலாஜி உள்பட பலரும் அண்ணாவின் நினைவு இல்லத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இதையும் படிக்க: தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

All party leaders tributes at the birthday celebration of former Chief Minister Anna held in Kanchipuram.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை: முதல்வர் தொடக்கி வைத்தார்!

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 2000 உதவித்தொகை வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(செப். 15) தொடக்கி வைத்தார்.தமிழக அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோா் இ... மேலும் பார்க்க

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று(செப். 15) தமிழகம் முழுவத... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 119.71 அடியாக குறைந்தது.மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று(செப். 15) காலை 119.72 அடியிலிருந்து 119.71 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 15,724 கன அடியிலிர... மேலும் பார்க்க

'புரிய வேண்டியவர்களுக்கு புரியும்' - செங்கோட்டையன்

அதிமுக தொண்டர்கள் கருத்தையே தான் பிரதிபலித்ததாகவும் அது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுடன் ... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(செப். 15) சவரனுக்கு ரூ. 80 குறைந்துள்ளது.நிகழாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த 8 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரன் சுமா... மேலும் பார்க்க

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் அண்ணா: விஜய்

தமிழக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக உழைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி, தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளத்தில், அவர் குறித்து பத... மேலும் பார்க்க