Waqf Bill 2025: `முழுமையாக தடை விதிக்க முடியது; ஆனால்.!’ - உச்ச நீதிமன்றம் சொல்வ...
`காயிதேமில்லத் சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பாஜக நேர்வழியில் நடந்திருக்கும்!' - கனிமொழி
நெல்லை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எழுச்சி மாநாடு, மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடந்தது. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “காயிதேமில்லத் அன்றே சொன்ன பாடத்தை ஏற்று நடந்தால் பா.ஜ.க நேர்வழியில் நடந்திருக்கும். இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்தில் முன்னின்று போராடியவர்கள் இஸ்லாமியர்கள்.

சி.ஏ.ஏ உள்ளிட்ட சட்டங்களைக் கொண்டு வந்தபோது அதனை எதிர்காமல் இஸ்லாமியர்களின் சகோதரன் எனக் கூறிய முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி, அதனை கொண்டு வந்துள்ள பா.ஜ.கவுடன் கூட்டணியில் உள்ளார். சி.ஏ.ஏ சட்டத்தை தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. முத்தலாக் தடை என்ற சட்டத்தை கொண்டு வந்து அச்சுறுத்துகின்றனர்.
வாக்குகளைக் காணவில்லை
மக்களுக்கும் நாட்டுக்கும் விரோதமாகச் செயல்படுபவர்கள்தான் பா.ஜ.கவினர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் என ஒன்றைக் கொண்டு வந்துள்ளனர். பல தொகுதிகளில் இஸ்லாமிய தலித் மக்களின் வாக்குகளைக் காணவில்லை.

பீகார் மாநிலத்தில் 55% பெண்களின் வாக்குகளைக் காணவில்லை. இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் பல மாநிலங்களில் இதே நடைமுறையைப் பின்பற்றியே தேர்தலில் வெற்றி பெற்று வந்துள்ளனர். இந்தியாவின் வருங்காலத்தை தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என பா.ஜ.க நினைக்கிறது. அது நடக்காது.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...