செய்திகள் :

பஞ்சாபில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட ராகுல்: குருத்வாராவில் வழிபாடு!

post image

பஞ்சாபின் அமிர்தசரஸில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா வாரிங், பஞ்சாப் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிரதாப் சிங் பாஜ்வா, அமிர்தசரஸ் எம்பி குர்ஜீத் அவுஜ்லா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தியுடன் சென்றனர்.

அமிர்தசரஸ் வந்த ராகுல்காந்தி, அங்கிருந்து அஜ்னாலாவில் உள்ள கோனேவால் கிராமத்திற்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து சேதம் குறித்துக் கேட்டறிந்தார்.

கோனேவால் கிராமத்தைப் பார்வையிட்ட பிறகு, அமிர்தசரஸின் ராமதாஸ் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். மேலும் குருதாஸ்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பஞ்சாபில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளது. சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆறுகள் பெருக்கெடுத்ததாலும், ஹிமாசலம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் அவற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையாலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

பஞ்சாபில் கனமழை வெள்ள நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியது. வெள்ளத்தால் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர், 1.98 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

செப். 9 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக மேற்கொண்டார். வெள்ள நிலைமை மற்றும் சேதத்தையும் ஆய்வு செய்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலத்திற்கு ஏற்கெனவே ரூ.12,000 கோடி நிதியுதவி அறிவித்திருந்த நிலையில், கூடுதலாக ரூ. 1,600 கோடி நிதியுதவியையும் அவர் அறிவித்தார்,

முன்னதாக, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சௌகான், எல் முருகன் மற்றும் பி.எல். வர்மா ஆகியோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர்.

Congress leader Rahul Gandhi on Monday visited the flood-hit areas of Amritsar and interacted with those affected by nature's fury.

இதையும் படிக்க: மும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

ஜனநாயகத்திற்கு மிகவும் நல்ல முடிவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கிரண் ரிஜிஜூ வரவேற்பு!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டம் மீதான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வரவேற்றார். நாட்டில் முஸ்லிம்கள் தானமாகவும், நன்கொடையாகவும் அளிக்கும் நிலங்கள் மற்றும் சொத்துகளை வக... மேலும் பார்க்க

ஹைதராபாத்தில் ஒரே இரவில் 245.5 மிமீ மழை! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக அந்த நகரம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஹைதராபாத்தில் நேற்று இரவு 8.30 மணி முதல் இன்று(திங்கள்) காலை ... மேலும் பார்க்க

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!

மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பை வானிலை ஆய்வு மையத்தின்... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: சில விதிகளுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்த உச்சநீதிமன்றம்!

மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு முழுவதுமாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொட... மேலும் பார்க்க

வருமான வரி கணக்கு தாக்கல்: கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (செப். 15) நிறைவடைகிறது.அபராதம் இன்றி ஐடிஆர் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்!

ஜிஎஸ்டி குறைப்பின் பலன் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா். சென்னை பிரஜைகள் மன்றம் சாா்பில் ‘எழுச்சி பெறும் பாரதத்துக்கான வரி சீா்திருத்தம்’ எனும் தலைப்பில... மேலும் பார்க்க