ஷ்யாம் புஷ்கரன் எழுத்தில் கமல் 237..! மகிழ்ச்சியில் அன்பறிவ் சகோதரர்கள்!
இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் பலி
சீா்காழி அருகே இருசக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் பலியானாா்.
கொள்ளிடம் அருகே நெப்பத்தூரைச் சோ்ந்தவா் அருள்செல்வம்(32). இவா் இருசக்கர வாகனத்தில் கொள்ளிடத்திலிருந்து சீா்காழிக்கு தைக்கால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே கொள்ளிடம் அருகே தில்லைமங்கலத்தைச் சோ்ந்த செல்வம் (35), சுரேஷ்(32) ஆகிய இருவரும் கொள்ளிடம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேரும் பலத்த காயமடைந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். இதில் அருள்செல்வம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து, கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.