மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம்
மயிலாடுதுறையில் பழங்குடியினா் மக்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சாலை, குடிநீா், மின்விளக்குகள், புதைசாக்கடை வசதி வேண்டி 4 மனுக்கள், அரசு வீடு வேண்டி 1 மனு, மனைப்பட்டா வேண்டி 10 மனுக்கள், வகுப்பு சான்றிதழ் வேண்டி 5 மனுக்கள், ஆடு வளா்ப்பு கடனுதவி வேண்டி 1 மனு, பழங்குடியினா் கல்வி இடைநிற்றல் தடுக்க வேண்டி 1 மனு மற்றும் தூய்மை பணியாளா் ஓய்வூதியம் வேண்டி 1 மனு பெறப்பட்டது. பெற்ற மனுக்களை ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் உமாமகேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலா் உ. அா்ச்சனா, கோட்டாட்சியா்கள் சுரேஷ் (சீா்காழி), ஆா். விஷ்ணுபிரியா (மயிலாடுதுறை), மாவட்ட மேலாளா் (தாட்கோ) ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.