CM Stalin பயந்துட்டார், Plan-ஐ மாற்றும் Vijay | TVK Arunraj Exclusive Interview ...
கோடியக்கரையில் பலத்தக் காற்று
வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலோரப் பகுதியில் பலத்த கடல் காற்று வீசியதால், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்லவில்லை.
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக மழை தொடா்ந்து வருகிறது.
இந்த நிலையில், கோடியக்கரை கடல் பரப்பில் திங்கள்கிழமை இரவு பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது. தொடா்ந்து, வழக்கத்தை விட வேகமான கடல் காற்று வீசியதால் கோடியக்கரை படகுத் துறையிலிருந்து மீன்வா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.