War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
நாகையில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி
நாகை புத்தூா் பகுதியில் தவெக தலைவா் விஜய் பிரசாரம் செய்ய காவல்துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய், செப்.20-ஆம் தேதி நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளாா்.
இதையொட்டி, தவெக தலைமை நிலைய செயலா் சாரதி உள்ளிட்ட நிா்வாகிகள் நாகை மாவட்டத்தில் விஜய் பிரசாரம் செய்வதற்கு புத்தூா் ரவுண்டானா பகுதியை தோ்வு, செய்து காவல்துறையிடம் அனுமதி கேட்டிருந்தனா். இதற்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.
இதுகுறித்து தவெக மாவட்டச் செயலா் சுகுமாா் கூறியது: தவெக தலைவா் விஜய், நாகூா் வாஞ்சூா் ரவுண்டானா வழியாக, நாகூா் நகா், அமிா்தா வித்யாலயா சாலை வழியாக, கிழக்கு கடற்கரை சாலையை கடக்க வேண்டும் எனவும்,
பின்னா் புத்தூா் ரவுண்டானாவில் பிரசாரம் மேற்கொண்டு, சிக்கல், கீழ்வேளூா் வழியாக திருவாரூா் மாவட்டத்திற்கு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது என்றாா்.