முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
Rhythm: "தண்ணீர்க் குடத்தில் பிறக்கிறோம் தண்ணீர்க் கரையில் முடிக்கிறோம்"- வைரமுத்து நெகிழ்ச்சி
இயக்குநர் வசந்த் இயக்கத்தில், அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், லக்ஷ்மி , மணிவண்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ரிதம்'.
இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இயக்குநர் வசந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் முதன் முதலில் இணைந்து பணிபுரிந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்திருந்தன.

அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். இந்தப் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில் வைரமுத்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் படம் குறித்துப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,
"கால் நூற்றாண்டு
கழிந்தபின்னும்
ரிதம் படப் பாடல்கள்
கொண்டாடப்படுவதைப்
புன்னகையோடு பார்க்கிறேன்
இசை மொழிக்கு
அழகு தருகிறது
மொழியோ இசைக்கு
ஆயுள் தருகிறது
ஐந்து பாடல்களுக்கும்
ஐம்பூதங்களை
உள்ளடக்கமாக்கியவர்
இயக்குநர் வசந்த்;
நல்லிசை நல்கியவர்
ஏ.ஆர்.ரகுமான்

நதியே நதியே பாடலில்
"தண்ணீர்க் குடத்தில்
பிறக்கிறோம்
தண்ணீர்க் கரையில்
முடிக்கிறோம்" என்ற வரிகளைத்
தமிழன்பர்கள் இன்றும்
மந்திரம்போல் ஓதுகிறார்கள்
காற்றே
என் வாசல் வந்தாய் பாடலில்
"பூக்களுக்குள்ளே
தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க
பூமிக்குமேலே
வானுள்ள வரையில்
காதலும் வாழ்க" என்ற வரிகளை
இன்றைய இருபது வயதுகள்
இதழோடு இதழ்சேர்த்து
உச்சரிக்கின்றன

நல்ல பாடல்கள்
தேன்போல...
கெட்டுப் போவதில்லை
படம் மறந்துபோனாலும்
பாடல்கள் மறப்பதில்லை
காடழிந்து போனாலும்
விதையழிந்து போவதில்லை" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...