செய்திகள் :

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

post image

வயநாட்டில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் வாழும் மக்களை நேரில் சந்தித்த மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.

கேரள மாநிலம், வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினரான பிரியங்கா காந்தி, அந்த தொகுதியில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

அதனொரு பகுதியாக, கொட்டியம்வயல் வனப் பகுதிக்குள் முன்மொழியப்பட்ட படிஞ்சரத்தாரா - பூழித்தோடு சாலை திட்டத்தை மாவட்ட ஆட்சியர், மாவட்ட வன அலுவலருடன் இணைந்து பிரியங்கா காந்தி புதன்கிழமை பார்வையிட்டார்.

தொடர்ந்து, நிலம்பூர் அருகேவுள்ள கருளை காடு வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

வயநாடு மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, கடந்தாண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Priyanka Gandhi met tribals in Wayanad

இதையும் படிக்க : பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

ஒரு தொகுதியில் மட்டும் 6,000 வாக்காளர்களை நீக்க முயற்சி! சான்றுகளுடன் ராகுல் குற்றச்சாட்டு!

கர்நாடகத்தில் உள்ள ஒரு தொகுதியில் மட்டும் 6,000 க்கும் அதிகமான வாக்காளர்களை நீக்க முயற்சி நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.ஆளுங்கட்சியுடன் இணைந்து தே... மேலும் பார்க்க

விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டம்!

கோவை : விண்வெளிக்கு வயோமித்ரா என்ற எந்திர மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்று கோவை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

பாகிஸ்தான் - செளதி அரேபியா இடையே கையெழுத்தான உடன்பாடு குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.பாகிஸ்தான் - செளதி அரேபியா நாடுகளுக்கு இடையே முக்கியமான பாதுகாப்பு... மேலும் பார்க்க

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி, துபை புர்ஜ் கலிஃபாவில் அவரது புகைப்படம் புதன்கிழமை இரவு ஒளிரச் செய்யப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி தனது 75 வது பிறந்த நாளை புதன்கிழமை கொண்டாடினார். அவருக்க... மேலும் பார்க்க

காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்

‘குளிா்காலம் நெருங்கிவரும் நிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த மூன்று வாரங்களில் செயல் திட்டத்தை வகுத்து சமா்ப்பிக்க வேண்டும்’ என்று மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு உச்சநீதிமன்றம் ப... மேலும் பார்க்க

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அவரின் மறைந்த தாயாரை சித்தரித்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை சமூக ஊடக பக்கங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு பாட்னா உயா்... மேலும் பார்க்க