செய்திகள் :

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

post image

விவசாயிகளின் நலனுக்காக எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடி நன்கொடையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இன்று வழங்கினார்.

நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. லக்ஷ்ம ரெட்டி. இவர் தனது சட்டப்பேரவைத் தொகுதியில் விவசாயிகளுக்கு ஆதரவான முயற்சிகளுக்காக நன்கொடை அளிக்க முன்வந்துள்ளார்.

அதற்காக, லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடிக்கான நன்கொடைக்கான காசோலையை இன்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினார். இந்த காசோலை வழங்கும்போது லக்ஷ்ம ரெட்டியுடன் அவரது மகன், மருமகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

எம்எல்ஏ லக்ஷ்ம ரெட்டி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு ஒரு பை இலவச யூரியாவை வழங்க முதல்வரிடம் வலியுறுத்தினார்.

தனது மகனின் திருமணத்திற்காக எம்எல்ஏ மிரியால்குடாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால் விவசாயிகளை ஆதரிப்பதற்காக அந்தப் பணத்தை நன்கொடையாக வழங்க முடிவு செய்ததாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர்களின் தாராளமான நன்கொடைக்காக ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.

Ruling Congress MLA Bathula Laxma Reddy on Thursday handed over a cheque for Rs two crore to Telangana Chief Minister A Revanth Reddy for pro-farmer initiatives in his assembly constituency.

இதையும் படிக்க:ஆர்வத்தைத் தூண்டும் சக்தித் திருமகன் ஸ்னீக் பீக்!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிற்காகப் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று கூறியுள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பில் ... மேலும் பார்க்க

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

வங்கிக் கணக்கு என்பது ஆடம்பரம் என்ற நிலை மாறி அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், தற்போது சைபர் அச்சுறுத்தல்களால், இரண்டு வங்கிக் கணக்கு என்பது அடிப்படையாகியிருக்கிறது.பெரும்பாலும், சைபர் அச்சுறுத்தல்களைப்... மேலும் பார்க்க

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்து ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.ஆளுங்கட்சியுடன் இணைந... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது. இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண ம... மேலும் பார்க்க

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரா... மேலும் பார்க்க

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தே... மேலும் பார்க்க