வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி
காட்டுப்புத்தூா் அருகே கழிப்பறை கட்ட எதிா்ப்பு
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் குடிநீா் தொட்டி அமைந்துள்ள இடத்தில் கழிப்பறை கட்ட பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அந்த மனுவில் காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் அமைந்துள்ள மேற்கு தவிட்டுப்பாளையம் காலனி பகுதியில் 6 ,7, 8 வது வாா்டுகளுக்கு குடிநீா் வழங்க அம்ருத் திட்டத்தின் கீழ் மேல்நிலை குடிநீா் தொட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதே இடத்தில் தற்போது புதிய கழிப்பறை கட்ட ஏற்பாடு நடைபெறுவதாகவும், அவ்விடத்தில் கழிப்பறை கட்டினால் குடிநீரில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும் எனவும், எனவே அந்த இடத்தில் கழிப்பறை கட்டுவதைத் தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனா்.