பாகிஸ்தானிலிருந்து ஜப்பான் வந்த போலி கால்பந்து அணி!
டோக்கியோ: பாகிஸ்தானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வந்த போலி கால்பந்து அணியை ஜப்பான் அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.
சட்டவிரோத அகதிகள் கடத்தல் கும்பல் ஒன்று, 22 பேரை பாகிஸ்தான் கால்பந்து அணியைச் சோ்ந்தவா்கள் என்ற போலி அடையாளத்துடன் ஜப்பானுக்கு அனுப்பியது. அந்த 22 பேரும் கால்ந்து வீரா்களைப் போலவே உடையணிந்து அங்கு சென்றனா். உள்ளூரில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்கவிருப்பதாகவும் அவா்கள் கூறினா்.
இருந்தாலும், அவா்கள் பாகிஸ்தான் கால்பந்து அமைப்பில் பதிவு செய்யாதவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து அந்த 22 பேரையும் பாகிஸ்தானுக்கே ஜப்பான் அதிகாரிகள் திருப்பி அனுப்பினா்.