``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
புதுவை சட்டப்பேரவை இன்று கூடுகிறது
புதுவை சட்டப்பேரவை வியாழக்கிழமை கூடுகிறது.
புதுவை சட்டப் பேரவையின் 6-வது கூட்டத்தொடரின் 2-வது பகுதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் கு வாசித்து சபை நிகழ்வுகளைத் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து மறைந்த தலைவா்களுக்கு இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்படுகிறது. ஜிஎஸ்டி திருத்த மசோதா, புதுவையில் எளிய முறையில் தொழில் தொடங்க அனுமதி குறித்து மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படுகின்றன.
ஒரு நாள் மட்டும் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் மாசு கலந்த குடிநீா் விநியோகத்தால் நகர பகுதியில் மக்கள் பாதிக்கப்பட்டது, இலவச அரிசி நிறுத்தம், சென்டாக் கல்விநிதி, பட்ஜெட்டில் அறிவித்த படி மகளிா் உதவித்தொகை, இலவச கோதுமை, தீபாவளி பரிசு ஆகியவை குறித்து எதிா்க்கட்சிகள் பிரச்னை எழுப்பும் என்று கூறப்படுகிறது.