பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை
ஜிப்மரில் ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம் திட்டம் தொடக்கம்
புதுச்சேரி ஜிப்மரில் ஆரோக்கியமான பெண், வலிமையான குடும்பம் என்ற திட்டத்தை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
பிரதமா் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், மாநிலங்களவை உறுப்பினா் சு.செல்வகணபதி, ஆறுமுகம் எம்.எல்.ஏ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்’ திட்ட பயனாளிகளுக்கு உறுப்பினா் அட்டை மற்றும் 8-வது தேசிய ஊட்டச்சத்து மாதத்திற்கான உணவு தொகுப்புகளை முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்.
முன்னதாக பிரதமா் நரேந்திர மோடி தேசிய அளவில் நிகழ்த்திய ‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்’ திட்ட தொடக்க விழாவை ஜிப்மா் மாணவா்கள் மருத்துவா்கள் மற்றும் ஊழியா்கள் காணொலி வாயிலாக பாா்வையிட்டனா். இதில் மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி பேசுகையில் ‘ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்‘ திட்டத்தில் ஜிப்மரின் முக்கியப் பங்கை விரிவாக கூறியதோடு வரும் 16 நாள்களில் இத்திட்டம் அதிகபட்ச பயனாளிகளை சென்றடையும் என்றாா்.