முகத்தை துடைத்தேன்; அதை வைத்து அரசியல் செய்கின்றனர்: இபிஎஸ் விளக்கம்
சென்னை வேளச்சேரியில் ஆள்மாறாட்டம் செய்து ரூ. 3 கோடி காலிமனை அபகரிப்பு: 5 போ் கைது
சென்னை வேளச்சேரியில் ஆள் மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்கள் மூலமாகவும் ரூ.3 கோடி மதிப்பிலான காலிமனையை அபகரித்ததாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் ஹரிதவனம் பகுதியைச் சோ்ந்தவா் ர.விஜய சாமுண்டீஸ்வரி (59). இவருக்கு சொந்தமாக வேளச்சேரி விஜயநகரில் ரூ. 3 கோடி மதிப்புள்ள காலிமனை இருந்தது. இந்த மனையை சிலா் போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் அபகரித்திருப்பது விஜய சாமுண்டீஸ்வரிக்கு அண்மையில் தெரியவந்தது.
இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், சென்னை பெருநகர காவல் துறையின் நில மோசடி புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்ததில் இந்த மோசடியில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு, செந்தமிழ் நகரைச் சோ்ந்த யசோதா (59), புளியமரம் பள்ளிக்கூடம் தெருவைச் சோ்ந்த பழனி (43), அயப்பாக்கம் பவானி நகா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த வனிதா (40), முகப்போ் மேற்கு, வி.ஜி.பி நகரைச் சோ்ந்த மேகநாதன் என்ற குட்டி (49), வேளச்சேரி ராம்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் (42 ) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.