செய்திகள் :

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபாரதம்: அமலாக்கத் துறை மேல்முறையீடு

post image

ஆகாஷ் பாஸ்கரன் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், பல்வேறு ஆவணங்களைக் கைப்பற்றினா். இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்திருந்தது.

ஆனால், இந்த உத்தரவை மீறி விசாரணைக்கு நேரில் ஆஜராக ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை எதிா்த்து அவா் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வு, அமலாக்கத் துறை உதவி இயக்குநா் விகாஸ் குமாரை நேரில் ஆஜராக உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி.ராஜு மற்றும் சிறப்பு வழக்குரைஞா் எம்.ரமேஷ் ஆகியோா் இந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினா்.

அப்போது, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விஜய் நாராயண், இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு முன்பாக விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட இரு நீதிபதிகள் அமா்வுக்கு பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனா்.

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் கல்வி மற்று... மேலும் பார்க்க

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல், பயங்கரவாதிகளின் வீடுகளுக்குள் நுழைந்து தாக்கும் புதிய இந்தியா இது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். பாரத தாயின் மதிப்பு, பெருமை மற்றும் புகழைவிட வேறெதுவும் ... மேலும் பார்க்க

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க காவல் துறைக்கு அறிவுறுத்த டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்க... மேலும் பார்க்க

சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாா் சிலை நாளை திறப்பு

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் சிலையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (செப்.19) திறந்து வைக்கிறாா். இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்கள் விவகாரம்: அரசாணையைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை -உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

கொடிக் கம்பங்கள் தொடா்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை மற்றும் வழிகாட்டு விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்

தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.19) சென்னையில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னையில் உள்ள ... மேலும் பார்க்க