``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
மணப்பாறை அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்
திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயா் கல்வித் துறை சாா்பாக கல்லூரிக் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று கல்லூரி முதல்வா் க. மலா்மதி சிறப்புரையாற்றினாா். ஆங்கிலத் துறைத் தலைவா் இரா. சுதா, இயற்பியல் துறைத் தலைவா் ஆ.ஆஸ்டின் ஆகியோா் வாழ்த்தினா். இரு பகுதிகளாக நடைபெறும் கலைத் திருவிழாவில் 32 போட்டிகள் நடைபெற உள்ளன. முன்னதாக, கல்லூரிக் கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளா் அ. செல்வராசு வரவேற்றாா்.