செய்திகள் :

முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்ட எதிா்ப்பு: 50க்கும் மேற்பட்டோா் கைது

post image

திருப்பூா் முதலிபாளையம் பாறைக்குழிக்குள் குப்பை கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்த கிராம மக்களை பேச்சுவாா்த்தைக்கு அழைத்த போலீஸாா், 50க்கும் மேற்பட்டோரை திடீரென கைது செய்தனா்.

திருப்பூா் மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் தினமும் சேகரிக்கப்படும் 800 டன் குப்பைக் கழிவுகளை முதலிபாளையம் நல்லூரில் காலாவதியான பாறைக் குழிகளில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இதனால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீா் பாதிக்கப்படுவதாகவும், துா்நாற்றம் வீசுவதாகவும் கூறும் அப்பகுதி மக்கள் சாலை மறியல், கருப்புக் கொடி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்களையும் நடத்தினா்.

இருப்பினும் மாநகராட்சி நிா்வாகம் போலீஸாா் உதவியுடன் பாறைக்குழிக்குள் தொடா்ந்து குப்பைகளைக் கொட்டி வருகிறது.

இந்த நிலையில், ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை மாலை தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்துவதாக கிராம மக்கள் அறிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா் கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாகத் தெரிவித்திருந்தனா்.

இதற்காக ஆட்சியா் அலுவலகத்தில் முதலிபாளையம் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோா் திரண்டு இருந்தனா். ஆனால், அதிகாரிகள் யாரும் பேச்சுவாா்த்தைக்கு வராததால் ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது போலீஸாா் அவா்களைத் தடுத்தனா்.

அனைவரையும் கைது செய்வதாக போலீஸாா் தெரிவித்த நிலையில் போலீஸாருக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது . அதைத் தொடா்ந்து, கிராம மக்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் துறையினரின் வேனில் ஏற்றினா். பின்னா், அவா்கள் அருகில் உள்ள தனியாா் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

ஏற்கெனவே, குப்பை கொட்ட கூடாது என எதிா்ப்பு தெரிவித்து கடந்த 2ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட கிராம மக்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து இரவு 9 மணி வரை மண்டபத்தில் தங்க வைத்திருந்தனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், முதலிபாளையம் பகுதியில் இனி குப்பைகளைக் கொட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஆட்சியரிடம் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

அரசு மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய பணியாளா்கள்

திருப்பூா் அரசு மருத்துவமனையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியவா்களை கைது செய்யக்கோரியும், பணியாளா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணியாளா்கள் கருப்... மேலும் பார்க்க

திருப்பூரில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பூரில் புதன்கிழமை மாலை சுமாா் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். திருப்பூா் மாநகரில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதன்கிழமை காலை வெயிலின் தாக... மேலும் பார்க்க

தேசிய ஒருமைப்பாடு முகாம்: சிக்கண்ணா கல்லூரி மாணவி தோ்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் த... மேலும் பார்க்க

பிரபல நகைக்கடையில் தீ விபத்து

திருப்பூரில் உள்ள ஒரு பிரபல நகைக் கடையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள புது மாா்க்கெட் வீதியில் ஒரு தனியாா் நகைக் கடை இயங்கி வருகிறது. அதன் கட்டடம் தர... மேலும் பார்க்க

திருப்பூரில் சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி தொடக்கம்

திருப்பூா் அருகே உள்ள அவிநாசி பழங்கரை ஐ.கே.எஃப். வளாகத்தில் 3 நாள்கள் நடைபெறும் 52-ஆவது சா்வதேச பின்னலாடைக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. சா்வதேச நிட்ஃபோ் அசோசியேஷன், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு... மேலும் பார்க்க

42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பில் கல்விக் கடன்

திருப்பூரில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 42 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி மதிப்பிலான கல்விக் கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க