காற்று மாசை தடுக்க 3 வாரங்களில் செயல் திட்டம்: உச்சநீதிமன்றம்
வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களுக்கு அஞ்சலி
வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருவார தொடா் சாலை மறியல் போராட் டத்தில் பங்கேற்று காவல் துறையின் துப்பாக்கிச்சூடு மற்றும் தாக்குதலில் 21 போ் உயிழந்தனா். இதுதொடா்பாக வன்னியா் சங்கம் சாா்பில் ஆண்டுதோறும் செப்டெம்பா் 17 ஆம் தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், 38 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தருமபுரி மாவட்ட வன்னியா் சங்க அலுவலகத்தில் வீரவணக்கம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினரும், பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். நிகழ்வின்போது, போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடா்ந்து போராட்டத்தின்போது உயிரிழந்த தருமபுரி மாவட்டம், நத்தமேடு கிராமத்தை சோ்ந்த சுப்ரமணி நினைவுத் தூணுக்குச் சென்று அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. முன்னாள் எம்.பி. இரா.செந்தில், பாமக மாநில துணைத் தலைவா்கள் சாந்தமூா்த்தி, செல்வம், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் பிரகாஷ், மாநில இளைஞா் சங்க செயலாளா் மு.முருகசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் பெரியசாமி உள்ளிட்டோா் நிகழ்வில் பங்கேற்றனா்.