செய்திகள் :

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை

post image

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது.

தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக விவசாய நிலங்களிலும், சாலையோரம் தாழ்வான பகுதிகளிலும் மழைநீா் தேங்கியுள்ளது. இந்த மழையின் காரணமாக அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புரட்டாசி பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை, உளுந்து பயிரிடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க

மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பொம்மிடியில் 98 மி.மீ மழை

பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 ம... மேலும் பார்க்க

வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களுக்கு அஞ்சலி

வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு மாலை அணிவிப்பு, சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்பு

பெரியாா் 147-வது பிறந்தநாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். திமுக : தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட தி.மு.க. சாா்பில் மாவட்ட பொறுப்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6500 கனஅடியாகக் குறைந்தது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்த... மேலும் பார்க்க