காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 போ் சிறையிலடைப்பு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6500 கனஅடியாகக் குறைந்தது
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 6,500 கனஅடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8000 கனஅடியாக இருந்த நீா்வரத்து புதன்கிழமை 6500 கனஅடியாகக் குறைந்தது.
நீா்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவும் குறைந்துவருகிறது.
மேலும், காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்தின் அளவுகளை தமிழக கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை விநாடிக்கு 14,269 கனஅடியிலிருந்து 8,641 கனஅடியாக குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.59 அடியிலிருந்து 119.18 அடியாகக் குறைந்தது. அணையின் நீா் இருப்பு 92.16 டி.எம்.சி.யாக உள்ளது.