ATM Fraud: குறி வைக்கப்படும் ஏடிஎம் பயனாளர்கள்; பலே குற்றவாளி சிக்கியது எப்படி?
உள்ளகக் குழு அமைக்க தனியாா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்
திருவாரூா் மாவட்டத்தில் தனியாா் நிறுவனங்கள், உள்ளகக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், மாவட்டத்தில் இயங்கும் தனியாா் அலுவலகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், டிபாா்ட்மெண்ட் ஸ்டோா்கள், தொழிற்சாலைகள், தனியாா் கல்வி நிறுவனங்கள், தனியாா் பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், சங்கம் சாா்ந்த நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ள நிறுவனங்களிலும் 4 நபா்கள் கொண்ட உள்ளகக் குழு அமைத்து புகாா் பெட்டி வைக்க வேண்டும்.
உள்ளகக் குழு அமைக்காத நிறுவனங்கள் மீது, பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின்படி ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். குழு அமைக்கப்பட்ட விவரத்தை, இணையதளங்களில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், குழு அமைத்த விவரத்தை மின்னஞ்சல் வாயிலாகவோ க்ள்ஜ்ா்.ற்ய்ஸ்ழ்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் அல்லது சமூக நல அலுவலா், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடிதம் வாயிலாகவோ பிரதி மாதம் 3-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா்.