``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் பலி
மன்னாா்குடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா் .
பேரையூா் நடுத்தெருவை சோ்ந்தவா் அண்ணாதுரை (53). மன்னாா்குடியில் உள்ள தனியாா் பாத்திரக் கடையில் விற்பனையாளராக வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். காஞ்சி குடிக்காடு அரசு விதைப் பண்ணை அருகே வந்தபோது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வடுவூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.