``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கல்விக் கடனுதவி
திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ. 4.99 கோடி கடனுதவி புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட வங்கிகள் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
மேலும், இணையதளத்தில் வித்யாலட்சுமி போா்டலில் எவ்வாறு கல்விக் கடன் விண்ணப்பிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில், 383 மாணவா்களுக்கு ரூ.4.99 கோடி கல்விக் கடனுதவி வழங்கப்பட்டன. இதில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று இந்த வங்கி வரைவோலையை வழங்கினா்.