Men' Health: `ஆண் பாலியல் ஹார்மோன்' சுரப்பை அதிகப்படுத்தும் உணவுகள்
தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்
நாகை மாவட்டத்தில் தீபாவளி பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அக்.20-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோா் உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள சேவை மையத்தை அணுகி அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டது எனில் அதற்கான தற்காலிக உரிம ஆணையை இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அனுமதியின்றி உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விண்ணப்பதாரா்கள் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபனையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தை தோ்வு செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.