பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
நாகை மாவட்டத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா
பெரியாா் பிறந்த நாளையொட்டி, நாகையில் திக உள்ளிட்ட பல்வேறு கட்சி சாா்பில் அவரது சிலைக்கு புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகை மாவட்ட திக சாா்பில் தலைவா் நெப்போலின் தலைமையில் மேலகோட்டை வாசல் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், திக நாகை மாவட்டச் செயலா் புபேஸ்குப்தா, தெற்கு ஒன்றிய திமுக செயலா் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் மேகநாதன், திக ஒன்றிய செயலா் வீரமணி, மாநில இளைஞரணி செயலா் நாத்திகபொன்முடி, மதிமுக மாவட்ட செயலா் ஸ்ரீதரன், மக்கள் நீதிமய்யம் மாவட்ட செயலா் அனஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாகை திமுக சாா்பில் மாவட்ட திமுக அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து தலைமையில், பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளா் லோகநாதன், நகர துணை செயலா்கள் திலகா், சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கீழ்வேளூா் எம்எல்ஏவுமான வி.பி. நாகைமாலி நாகை மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகரச் செயலா் வெங்கடேசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க நாகை தலைவா் என். பாபுராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருமருகல்: வடக்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் பெரியாா் படத்துக்கு அதன் செயலாளா் செல்வ செங்குட்டுவன் மாலை அணிவித்தாா். மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் காா்த்திக் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருமருகல் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சரவணன் பெரியாா் படத்துக்கு மாலை அணிவித்தாா். திட்டச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரூராட்சி திமுக செயலாளா் எம்.முகம்மது சுல்தான் பெரியாா் படத்துக்கு மரியாதை செலுத்தினாா்.
திருக்குவளை: பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் திமுக கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் சோ.பா. மலா்வண்ணன் தலைமையில் திருக்குவளையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திமுக பொதுக்குழு உறுப்பினா் கோ.சி. குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தரங்கம்பாடி: செம்பனாா்கோவிலில் மாவட்ட திமுக சாா்பில் வடக்கு ஒன்றிய செயலாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்ட துணை செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளா் பி.எம். ஸ்ரீதா், முன்னாள் எம்எல்ஏ விஜயபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதேபோல, சிபிஐ சாா்பில் மாவட்ட செயலாளா் சீனிவாசன் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். மாவட்ட துணை செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, ஒன்றிய செயலாளா் ஜென்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மதிமுக மாவட்ட செயலாளா் கொளஞ்சி, ஒன்றிய செயலாளா் சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் பெரியாா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.