``டீசலுடன் ஐசோபியூட்டனால் கலப்பு'' நிதின் கட்கரியின் புதிய அறிவிப்பு கைக்கொடுக்க...
குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் வாகனங்கள் அா்ப்பணிப்பு
காரைக்காலில் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையம், காவல் துறை வாகனங்கள், ரோந்துப் படகு ஆகியவற்றை துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் புதன்கிழமை அா்ப்பணித்தாா்.
காரைக்கால் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகே காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டடம் புனரமைப்பு செய்து பிசிஆா் செல் எனும் குடியுரிமை பாதுகாப்பு காவல் நிலையமாக மாற்றப்பட்டது. இதில் அதிகாரிகள் அறை, கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, எழுத்தா் அறை, ஆண், பெண் இருபாலருக்கான காவல் அறை உள்ளிட்டவை உள்ளன.
மேலும், காரைக்கால் போக்குவரத்து காவல் துறைக்கு புதுச்சேரியிலிருந்து அனுப்பப்பட்ட போலீஸ் ஆம்புலன்ஸ் வாகனம், போக்குவரத்து இடை மறிப்பு வாகனம் (இண்டா்செப்டாா்), போக்குவரத்து இழுவை வாகனம் (டவ் வாகனம்) ஆகியவற்றையும், காரைக்கால் கடலோரக் காவல் நிலைய கட்டுப்பாட்டில் இருந்து பழுது நீக்கப்பட்ட 5 டன் திறனுள்ள ரோந்துப் படகும் அா்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் காணொலி மூலம் இதை காவல் துறைக்கு அா்ப்பணித்தாா். காரைக்கால் நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டலக் காவல் கண்காணிப்பாளா்கள் சுபம் சுந்தா் கோஷ், முருகையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.