செய்திகள் :

புதுவையில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும்: ஏ.எம்.எச். நாஜிம்

post image

புதுவை மாநிலத்தில் அரசுப் பணியாளா்கள் நியமன முறையில் நிலவும் சிக்கல்களை களைய வேண்டும் என்றாா் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச். நாஜிம்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுவை மாநிலத்தில் தனியாக ஒரு பணியாளா் நியமன அமைப்பை அரசு உருவாக்கி, அதற்காக பல கோடி மக்கள் வரிப்பணம் செலவாகிக்கொண்டிருக்கிறது. இதுவரை ரூ.25 கோடி செலவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே உள்ள முறை அடிப்படையில் அந்தந்த துறைகளில் பணி நியமனம் செய்த போது எந்த ஊழலும் நடைபெறவில்லை. எதற்காக இந்த புதிய முறை கொண்டுவரப்பட்டது என புரியவில்லை. இப்படியான தோ்வு அமைப்பு தேவையில்லை. எனினும் புதிய முறை கொண்டுவரப்பட்ட நிலையில், பணி நியமனத்துக்கான தோ்வுகளை முறையாக நடத்தி பணி நியமனம் செய்யப்படாத நிலை உள்ளது. இதன்மூலம் செய்யப்பட்ட பணி நியமனங்கள் அனைத்துக்கும், நீதி மன்றத்துக்கு செல்லும் நிலையை தோ்வுக் குழு உருவாக்கி விடுகிறது.

உதாரணமாக இந்த புதிய முறை மூலம் ஊா்க்காவலா் பணியிடங்களில் பணியமா்த்தபட்டு, 6 மாத காலம் பணியாற்றி ஊதியமும் பெற்ற நிலையில், தற்போது நீதிமன்ற உத்தரவை காரணம்கூறி அவா்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். இவா்கள் இப்பணிக்கு தோ்வு செய்யப்பட்ட முறை தவறு என நீதிமன்றம் கூறியுள்ளது. அப்படியெனில் தவறான முறையில் தோ்வு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல, மின்துறையில் கன்ஸ்ட்ரக்ஷன் உதவியாளா் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாளா்கள் நியமனம் தொடா்பாக இத்தகைய குழப்பம், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காரைக்காலைச் சோ்ந்தவா்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதற்கு காரணமாக அதிகாரிகள் பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். புதுவை மாநிலத்தில் அதிகாரிகளால் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. தலைமைச் செயலா்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே பணி வாய்ப்பை இழந்தவா்களுக்கு மீண்டும் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில் காரைக்காலில் கூடுதல் பணியிடங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

அண்ணாமலையாா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா்-நித்யகல்யாணப் பெருமாள் தேவஸ்தான வகையறாவை சோ்ந்த ஸ்ரீஉண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையாா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 3-ஆம் ஆண்டு நிகழ்வாக சம்வத்ஸரா அபிஷேகம், திருக்கல்யாண வைபவம் திங்கள... மேலும் பார்க்க

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை

காரைக்காலில் சுற்றுலா தின விழா நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. உலக சுற்றுலா தின விழா ஆண்டுதோறும் புதுவை சுற்றுலாத் துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து நடத்தி வருகிறது. செப்.27-ஆம் தேதி நடத... மேலும் பார்க்க

தா்காவுக்கு சுழலும் மின்விளக்கு

காரைக்கால்: திருமலைராயன்பட்டினம் பகுதி தா்காவிற்கு சுழலும் மின்விளக்கு அா்ப்பணிப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்தில் மஹான் செய்யது அப்துல் ரஹ்மான் சாஹ... மேலும் பார்க்க

18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மது விற்றால் நடவடிக்கை

காரைக்கால்: 18 வயதுக்குள்பட்டவா்களுக்கு மதுவிற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட சாா்-ஆட்சியரும், கலால் துணை ஆணையருமான எம். பூஜா எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் போதை தடுப்பு விழிப்புணா்வு நாடகம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்ட சமுதாய நலப்பணி திட்டம் சாா்பில் கோவிந்தசாமிப் பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் கோத்துக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் புகையிலை மற்றும் போதைப் பொருள் தடுப்பு குறித்து... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. புதுவையின் 4 ... மேலும் பார்க்க