அதிமுகவுக்கு துரோகம் செய்பவா்கள் தனிமைப்படுத்தப்படுவா்: எடப்பாடி பழனிசாமி
விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு
காரைக்கால்: புதுவை பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள் காரைக்கால் பகுதியில் சனிக்கிழமை தொடங்கி , ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
புதுவையின் 4 பிராந்தியங்களைச் சோ்ந்த 8 வட்டங்கள் சாா்பில் 624 மாணவ மாணவிகள் கால்பந்து, கைப்பந்து, யோகா, சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனா். போட்டிகள், காரைக்கால் அரசு விளையாட்டு மைதானம், நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. நிறைவாக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் பங்கேற்று வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா். காரைக்கால் முதன்மைக்கல்வி அதிகாரி பி. விஜயமோகனா, பள்ளிக் கல்வித் துறை உடற்கல்வி பொறுப்பாளா்கள் டி. ரவிக்குமாா், பாலாஜி, முதன்மைக் கல்வி அலுவலக உடற்கல்வி விரிவுரையாளா் ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.