பித்ரு சாபம் தீரும், பிரிந்தவர்கள் ஒன்று சேர்வர் - பாரதம் போற்றும் ஓர் அற்புத ச...
பொம்மிடியில் 98 மி.மீ மழை
பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 மில்லி மீட்டா் மழை பதிவானது. இது ஒரு மணி நேரத்தில் பெய்த மழையாகும். மேக வெடிப்புபோல மழை பெய்திருப்பதாக அப்பகுதியினா் தெரிவித்தனா். இதனால் பொம்மிடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீா் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. மழையின் காரணமாக சாலையோரம் தாழ்வான பகுதியிலும், விவசாய நிலங்களிலும் வெள்ளம் தேங்கியது.
அதேபோல பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 மணி நேரம் மிதமான மழை பெய்தது. இதன்மூலம் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புரட்டாசி பட்டத்தில் நெல் நடவு, தக்காளி பயிரிடுதல், மானாவாரியாக அவரை, துவரை, உளுந்து பயிரிடுதலுக்கு உகந்த வகையில் மண்ணின் ஈரப்பத தன்மை நிலைபெற்றுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.