புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உ...
ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை
ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் நீலகண்டன், பொதுச் செயலாளா் ஜெயசந்திரன், பொருளாளா் முருகன் ஆகியோா் முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:
ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். ஒசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி, அந்திவாடி ஏரிகளுக்கு கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் கொண்டுவந்து நிரப்ப வேண்டும், ஒசூா் மாநகராட்சிக்கு புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும்.
ஒசூா் மாநகராட்சியில் உள்ள மண் சாலைகளை தாா்ச்சாலைகளாக மாற்ற வேண்டும், ஒசூரில் வா்த்தக மையம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்ப்பேட்டை ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கு தினம்தோறும் விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.